search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காமெடிக்கு மாறும் வில்லன் நடிகர்
    X

    காமெடிக்கு மாறும் வில்லன் நடிகர்

    பல படங்களில் வில்லனாக நடித்த ரவிமரியா நகைச்சுவை வேடங்களில் நடிக்க விரும்புகிறார்.
    வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ரவிமரியா. பின்னர் எழில் இயக்கத்தில் 'மனம் கொத்தி பறவை', 'தேசிங்கு ராஜா' படங்களிலும் வில்லனாக நடித்தார்.

    இப்போது 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் காமெடி வில்லனாக கலக்கி இருக்கிறார். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதுபற்றி கூறிய ரவிமரியா, “இந்த படத்தில் எனது காமெடி நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. பாராட்டுகளும் குவிகின்றன. காமெடி நடிகராகவேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். பல படங்களுக்கு வசனம் எழுதினேன். சந்தானத்துக்கும் காமெடி வசனம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க விரும்புகிறேன்” என்றார்.
    Next Story
    ×