search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கார்டுகள்"

    பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கியதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்று தளவாய் சுந்தரம் பேசினார். #thalavaisundaram #admk #pongalgift1000

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோட்டார் நாராயணவீதியில் நடந்தது. நகரச் செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். விக்ரமன் வரவேற்று பேசினார். வீராசாமி, ரபீக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், தலைமைக் கழக பேச்சாளர்கள் பாரதி யன், முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.தி.மு.க. இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. இருக்கும். அம்மா மறைவிற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறமையாக ஆட்சியை நடத்தி வருகிறார்கள். ஏழை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார். இதன்மூலம் அ.தி. மு.க. அரசுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடினமாக உழைத்தால் தங்களுக்கு வர வேண்டிய பதவியும், பொறுப்பும் உங்களுக்கு தேடி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அணிச் செயலாளர்கள் சி.என்.ராஜதுரை, ஜெயசீலன், சுகுமாரன், பொன்சுந்தர் நாத், சுந்தரம், ஷாநவாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரெயிலடி மாதவன், கார்மல்நகர் தனீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம் நன்றி கூறினார். #thalavaisundaram #admk #pongalgift1000

    வெங்கல் அருகே பொங்கல் பரிசு பெற வரிசையில் நிற்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரின் கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியபாளையம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதனை வாங்க ரே‌ஷன் கடைகளில் தினமும் கூட்டம் அலை மோதுகிறது.

    இதேபோல் வெங்கல் அருகே பண்டி காவனூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையிலும் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு (32) என்பவர் வரிசையில் நிற்காமல் ரகளையில் ஈடுபட்டார்.

    இதுபற்றி அறிந்ததும் வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட டில்லிபாபுவை வரிசையில் நிற்கும்படி கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மீது பாய்ந்து தாக்கினார். மேலும் அவரது கை, தோள் பட்டையில் கடித்தார்.

    அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோதலில் ஈடுபட்ட டில்லிபாபுவை சமாதானம் செய்து விலக்கினர். இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லிபாபுவை கைது செய்தனர்.

    பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்கவேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. #PongalGift #Pongal #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இது பற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கி இன்றோடு 3 நாட்களாகி விட்டது. 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்குள் மட்டுமே பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



    எனவே எக்காரணம் கொண்டும் 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே பொங்கல் பரிசு பொருட்களை இன்று முதல் விரைந்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PongalGift #Pongal #TNGovt
    ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #pollachijayaraman #Jayalalithaa

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்க பணத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது.

    தற்போதுள்ள ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் ரூ. 1000-மும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் காயத்ரி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அக்னீஸ் முகுந்தன், அருணாசலம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachijayaraman #Jayalalithaa

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்க ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். வருகிற 8,9-ந்தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிக்காமல் வேலைக்கு வருவார்கள். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படும்.

    பொங்கல்பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட், தண்ணீர் வசதி, மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் இன்னும் 2, 3 நாட்களில் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.


    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தல் போன்று 20ரூபாய் நோட்டு இத்தேர்தலில் எடுபடாது. நாளை ரெட் பஸ் மற்றும் 550 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது கீதா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.1000 கொடுக்கும் பட்சத்தில் நடப்பாண்டில் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #PongalGift #TNGovt
    சென்னை:

    பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வருகிற திங்கட்கிழமை முதல் இந்த பணப்பட்டுவாடா தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 கொடுக்கும்பட்சத்தில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 20 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    2 வாரங்களுக்கு முன்பு அரிசி, கரும்பு, சர்க்கரை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1000 கொடுக்கும் முடிவு அதற்கு பிறகு எடுக்கப்பட்டது.

    தமிழக அரசின் இந்த திடீர் முடிவால் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நடப்பாண்டில் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும் என்று அதிகாரிகள் வரையறுத்துள்ளனர்.


    இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பரிசுத் தொகை திட்டத்துக்காக கிட்டத்தட்ட ரூ.2,277 கோடி செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2016-17ம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.13 ஆயிரம் கோடியாக இருந்தது. 2017-18ம் நிதியாண்டில் அது ரூ.18,370 கோடியாக உயர்ந்தது. என்றாலும் வருவாய் பற்றாக்குறை, நிதிச்சுமையை சமாளிக்க முடியும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். #PongalGift #TNGovt
    தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. #PongalGift #EdappadiPalaniswami
    சென்னை:

    கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

    ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.

    இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போதும் கூட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. 1000 ரூபாய் பணமும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முதன் முதலாக அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    ஏழைகள், வசதி படைத்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் கிடைக்கும்.

    இதன் மூலம் அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சம் செலவாகிறது. பொங்கல் பொருட்கள் தொகுப்பிற்கு மட்டும் ரூ.257 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



    பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் வழங்கப்படும்.

    பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.

    பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால் காகித பையில் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    பொங்கல் பரிசு 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும்.

    நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு ரே‌சன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து ரே‌சன் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். #PongalGift #EdappadiPalaniswami
    அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார். #TNAssembly #Governor #PongalGift
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். திருவாரூர் தொகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும்.

    ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.  சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்குகிறது.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும். 

    இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளார். #TNAssembly #Governor #PongalGift
    தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #PongalFestival #PongalGiftHamper
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

    கோப்புப்படம்

    ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம்  ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். #PongalFestival #PongalGiftHamper
    உத்தமபாளையம் தாலுகாவில் இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்கிய 106 ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது.

    உத்தமபாளையம்:

    ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

    அதிகாரிகள் சோதனையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. தேனி மாவடத்தில் உத்தமபாளையம் 1,40,000 ரேசன் கார்டுகள் உள்ள பெரிய தாலுகாவாகும். இங்கு சுமார் 18 ஆயிரம் ஒரு நபர் ரேசன் கார்டுகள் உள்ளன.

    அதிகாரிகள் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் 106 பேர் இறந்த பின்பும் அவர்கள் பெயரில் ரேசன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அந்த கார்டுகளை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    மேலும் கூட்டு குடும்பத்தில் இருந்து கொண்டு தனிநபர் கார்டு பயன் படுத்துவோர் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பெயரை குடும்பத்தில் உள்ள ரேசன் கார்டுகளுடன் சேர்த்து விட சிவில் சப்ளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை தாலுகாவில் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விட்டதோ என குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டை தாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஒரு சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர்-நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கணினி பிழை ஏற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை நிலக்கோட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாவிலும் வினியோகம் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். இது குறித்து அவர்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. ஆனால் அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற் கொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர்.

    கடந்த 1 வருடமாகவே நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 1500 ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே இந்த கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்க வில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×