என் மலர்
செய்திகள்

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #PongalFestival #PongalGiftHamper
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். #PongalFestival #PongalGiftHamper

கோப்புப்படம்

Next Story