என் மலர்

  செய்திகள்

  பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கியதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது- தளவாய் சுந்தரம்
  X

  பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கியதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது- தளவாய் சுந்தரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கியதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்று தளவாய் சுந்தரம் பேசினார். #thalavaisundaram #admk #pongalgift1000

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோட்டார் நாராயணவீதியில் நடந்தது. நகரச் செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். விக்ரமன் வரவேற்று பேசினார். வீராசாமி, ரபீக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், தலைமைக் கழக பேச்சாளர்கள் பாரதி யன், முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

  ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.தி.மு.க. இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. இருக்கும். அம்மா மறைவிற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறமையாக ஆட்சியை நடத்தி வருகிறார்கள். ஏழை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

  பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார். இதன்மூலம் அ.தி. மு.க. அரசுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

  ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

  கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடினமாக உழைத்தால் தங்களுக்கு வர வேண்டிய பதவியும், பொறுப்பும் உங்களுக்கு தேடி வரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அணிச் செயலாளர்கள் சி.என்.ராஜதுரை, ஜெயசீலன், சுகுமாரன், பொன்சுந்தர் நாத், சுந்தரம், ஷாநவாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரெயிலடி மாதவன், கார்மல்நகர் தனீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  வேலாயுதம் நன்றி கூறினார். #thalavaisundaram #admk #pongalgift1000

  Next Story
  ×