search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பயணிகள்"

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இல்லாமல் ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில், வருகிற 25-ந்தேதி முதல் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    பாதுகாப்பு காரணத்திற்கான முன்பதிவு இல்லாத பெட்டிகள் நீக்கப்பட்டன. அதன்பின் அந்த பெட்டியில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என ரெயில்வே தெரிவித்திருந்தது.

    இதனால் உடனடியாக வெளியூர் செல்லும் நபர்கள், அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லும் நபர்கள் ரெயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், முன்பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டன.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதில் இருந்து தமிழகத்தில் முக்கியமான ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரெயில்வேதுறை அறிவித்துள்ளது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் ரெயில்கள் விவரம்:

    1. சென்னை - காரைக்குடி பல்லவன்  சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

    2. சென்னை - மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

    3. சென்டிரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட்

    4. தாம்பரம் - நாகர்கோயில் அந்தோத்யா

    5. மதுரை சந்திப்பு- புனலுர் எக்ஸ்பிரஸ்

    6. மங்களூர் சென்டிரல்- கோவை

    7.  திருநெல்வேலி- பாலக்காடு எக்ஸ்பிரஸ்

    8. நாகர்கோவில்- மங்களூர் எக்ஸ்பிரஸ்
    ×