search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிருகண்டா அணை"

    • 18.5 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    திருவண்ணாமலை:

    பருவ மழை தொடங்கியதன் காரணமாக கலசப்பாக்கம் அருகே உள்ள மிருகண்டா அணையின் பாதுகாப்பு கருதி 65 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கலசப்பாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிரா மத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும் தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு உள்ளன. இதனால் அணையில் 18.5 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன. தற்போது அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 65 கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன.

    இதனால் அணையின் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×