search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மியாமி ஓபன் டென்னிஸ்"

    • மற்ற ஆட்டங்களில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்) மக்டா லினெட்( போலந்து), கோகோ காப்(அமெரிக்கா) ஜெலினா ஒஸ்டா பென்சோ (லாத்வியா) ஆகியோரும் 3-வது சுற்று தகுதி பெற்றனர்.
    • இன்று நடந்த பெண்கள் ஒன்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அசரென்கா, கமிலா ஜியோர்ஜியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒன்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 14-ம் நிலை வீராங்கனையான அசரென்கா(பெலாரஸ்) 6-3,6-1 என்ற நேர்செட் களத்தில் கமிலா ஜியோர்ஜியை (இத்தாலி) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்) மக்டா லினெட்( போலந்து), கோகோ காப்(அமெரிக்கா) ஜெலினா ஒஸ்டா பென்சோ (லாத்வியா) ஆகியோரும் 3-வது சுற்று தகுதி பெற்றனர்.

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர், மேட்வெதேவ், டேவிட் கோபின், சிட்சிபாஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். #MiamiOpen
    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் பிலிப் கிராஜினோவிக்கை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் டேனில் மெட்வெதேவ் ரெய்லி ஒபெல்காவை எதிர்கொண்டார். இதில் மெட்வெதேவ் கடும் போராட்டத்திற்குப்பின் 7(7) - 6(5), 6(5) - 7(7), 7(7) - 6(0) என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஷபோவாலோவ் 6-3, 7(7) - 6(5) எனவும், டிசிட்சிபாஸ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கிலும், டேவிட் கோபின் 6-4, 6-4 என நேர்செட் கணக்கிலும் வெற்றி பெற்றனர்.
    தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் குணேஸ்வரன் மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #MiamiOpen
    மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. மியாமி டென்னிஸ் தொடருக்கான தரநிலை பெறாத வீரர்கள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதன் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேற வேண்டும்.

    இந்தியாவைச் சேர்ந்த தமிழக வீரர் குணேஸ்வரன் முதல் இரண்டு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய் கிளார்க்கை எதிர்கொண்டார். இதில் குணேஸ்வரன் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ஜாமி முனாரை நாளை எதிர்கொள்கிறார்.
    ×