search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ நீதிமன்றம் திறப்பு"

    • பாலியல் தாக்குதல்-வன்முறை, பாலியல் துன்புறுத்தல்-சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக போக்சோ சட்டத்தில் முன் வைக்கிறது.
    • தேனி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி , மாவட்ட கலெக்டர்ஷஜீவனா தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே முன்னிலையில் திறந்து வைத்தார்.

    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

    18 வயதுக்கு குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். பாலியல் தாக்குதல்-வன்முறை, பாலியல் துன்புறுத்தல்-சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

    30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.

    இதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பின்னர், இந்த புதிய நீதிமன்றத்தின், முதல் வழக்கு விசாரணையை நீதிபதிகணேசன் தொடங்கிவைத்தார்.

    இதில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×