search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் அதிகாரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
    • சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார்.

    பனாஜி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் (வயது39) என்ற பெண்மணி உள்ளார்.

    இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான அபார்ட்மெண்ட் ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார்.

    இந்நிலையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததும், கறைகள் படிந்த துணிகளை பார்த்தும் அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    சந்தேகம் அடைந்த அவர்கள் சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் விவரங்களை தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு வரவேற்பாளர் இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான். எனவே அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவுறுத்திய நிலையிலும் சுசனா சேத், டாக்சியில் தான் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

    அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக திகழும் சுசனா சேத் யாருடைய உதவியையும் கேட்காமல் பெரிய பேக்கை எடுத்து சென்றது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவருடன் வந்த மகன் எங்கே என்ற கேள்விக்கும் விடை தெரியாததால் போலீசார் திகைத்தனர்.

    இவ்வாறாக அடுத்தடுத்து சந்தேகங்கள் வலுத்ததால் போலீசார் சுசனா சேத் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே? என விசாரித்தனர். அப்போது சுசனா சேத்தை தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறினார்.

    ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலி முகவரி என தெரிய வந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது.

    இதைத்தொடர்ந்து கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த பையில் சுசனா சேத்தின் மகன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மகனை கொன்றுவிட்டு உடலை பையில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. ஆனால் கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் சுசனா சேத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மஞ்சரியாலா பெல்லம் பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.

    அப்போது துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ அடிக்கடி எனக்கு போன் செய்து நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என பேசி வருகிறார் .

    மேலும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து தொல்லை கொடுத்தனர்.

    நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என புகாரில் கூறியிருந்தார்.

    மேலும் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    அவரிடம் முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எம்.எல்..ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போராட்டத்தை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

    அதனை ஏற்று சேஜல் போராட்டத்தை கைவிட்டார். மீண்டும் அவர் ஐதராபாத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் அதிகாரி சேஜல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பெண் அதிகாரி சேஜல் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் பெண் அதிகாரி சேஜல் அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர் அதில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ.வின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது ஆட்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என எழுதியுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா. இவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கணவர் ராணுவத்திலும், மகன் வெளியூரிலும் வேலை பார்த்து வந்ததால் கல்பனா மட்டும் மதுரையில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்பனா வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த 32 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி, ரூ.62 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதனிடையே மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த கல்பனா கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம், பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் மீண்டும் கைவரிசை
    • மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகம் தரிவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் மோனிஷா (வயது 24). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு மோனிஷா, தனது தாயாரின் இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் சென்று பொருட்கள் வாங்கினார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். சாங்கை-கோட்டகம் சாலையில் மோனிஷா வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதில் வந்த மர்மநபர் ஆள் நட மாட்டம் இல்லாத பகுதியில், மோனிஷாவின் வாகனத்தை வழி மறித்துள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதனை பயன்படுத்தி அந்த வாலிபர், மோனிஷா கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் நகையை பிடித்துக் கொண்டு போராடிய மோனிஷா, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார்.

    இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர், மோனிஷாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளை பார்வையிட்டு அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பேராசிரியையிடம் 16 பவுன் நகை பறித்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது.
    • விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரத்தை செலுத்த சென்றார். வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்தபோது, அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 7 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணத்தை அவரிடம் கொடுத்தது எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷாமோள் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆனால், கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. ஜிஷாமோள் இதற்கு முன்பு மாராரிக்குளம் பகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்தே அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.

    இந்தநிலையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளிவரும் என அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பல்லடம் : 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

    அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

    இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார் .அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரளாவின் முக்கிய நகரங்களில் கோவில் யானைகள் பராமரிப்பு முகாம்கள் உள்ளன.
    • குருவாயூர் தேவஸ்தானத்தின் யானைகள் முகாமில் இதுவரை பெண் அதிகாரி யாரும் நியமிக்கப்பட்டதில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளில் யானைகள் இடம்பெறுவது வழக்கம்.

    இதற்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் கோவில் யானைகள் பராமரிப்பு முகாம்கள் உள்ளன. இதில் குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர்கோட்டை முகாமில் 60-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பாகன்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே யானைகளின் பராமரிப்பு மற்றும் அவற்றை பாதுகாப்பதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

    இந்த முகாமில் பெரும்பாலும் ஆண்களே அதிகார பொறுப்பில் இருப்பார்கள். தற்போது முகாமின் நிர்வாக அதிகாரியாக மம்மியூரை சேர்ந்த லெஜூமோள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கேரளாவில் முதல் முறையாக இந்த பொறுப்புக்கு வந்த பெண் இவரே ஆவார்.

    குருவாயூர் தேவஸ்தானத்தின் யானைகள் முகாமில் இதுவரை பெண் அதிகாரி யாரும் நியமிக்கப்பட்டதில்லை. 47 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த பொறுப்பை பெண் ஒருவர் ஏற்றுள்ளார்.

    இந்த பொறுப்பு கிடைத்தது பற்றி லெஜூ மோள் கூறியதாவது:-

    இந்த பதவிக்கு வந்த முதல் பெண்மணி என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இது பெரிய பொறுப்பு. என்றாலும் எங்கள் குடும்பம் யானைகளை நேசிக்கும் குடும்பம்.

    இங்குள்ள யானைகள் அனைத்தும் கோவில் சடங்குகளில் மட்டுமே கலந்து கொள்ளும். அவற்றை சிறப்பாக பராமரிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×