அவினாசி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது பெண் அதிகாரி போலீசில் புகார்

ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com