search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female officer"

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா. இவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கணவர் ராணுவத்திலும், மகன் வெளியூரிலும் வேலை பார்த்து வந்ததால் கல்பனா மட்டும் மதுரையில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்பனா வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த 32 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி, ரூ.62 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதனிடையே மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த கல்பனா கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம், பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது.
    • விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பல்லடம் : 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

    அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

    இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார் .அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) தருமபுரியில் உள்ள பிடமனேரியை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி (வயது 45) என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் பெறப்படுவதாக தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீரென்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில், சார் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதியிடம் கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 266 மற்றும் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பிரகாஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரத்து 600 மற்றும் சேகர் என்பவரிடம் ரூ.8 ஆயிரத்து 920-ம் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சார்பதிவாளர் உள்ளிட்ட 3 பேரிடமும் இருந்து கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்து 786 பறிமுதல் செய்யப்பட்டது.

    சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி

    மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் இடைத்தரகர்கள் பிரகாஷ், சேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு பிறகு அருட்பெருஞ்ஜோதி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×