search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி வகுப்பு"

    ஆலையின் அரவை திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மாதம் சுமார் 6,300 டன் கரும்புகள் அரவை செய்யப்படுகிறது.

    கடந்த 10 வருடங்களுக்கு இந்த அரவை ஆலையின் செயல்திறன் ஆண்டுக்கு 2.50 லட்சம் டன் என்ற நிலையில் இருந்தது.

    ஆனால் தற்போது ஆண்டுக்கு 1.30 லட்சம் டன் என்ற அளவில் அரவை குறைந்துள்ளது. இதற்கு கரும்பு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பே காரணம். பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மீண்டும் ஆலையின் அரவை திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.

    அதன்படி டிரோன் மூலம் திரவ வடிவிலான உரங்களை தெளிப்பது குறித்து ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆலை நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை தற்போது விவசாயிகள் கைகள் மூலம் தெளித்து வருகின்றனர். இதனால் கால விரயம் , கூலி செல்வு போன்றவை ஏற்படுவதுடன் உரிய பயனும் கிடைப்பதில்லை.

    டிரோன்கள் மூலம் திரவ வடிவிலான உரங்களை தெளிப்பது மூலம் பயிர்களுக்கு முழுமையான அளவில் பயன் கிடைக்கும். செலவு குறையும். மேலும் ஒரு ஏக்கருக்கு டிரோன் மூலம் 20 நிமிடத்தில் உரத்தை தெளித்து விடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான கரும்பு விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விரைவில் 2-வது பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×