search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண அழைப்பிதழ்"

    • இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர்
    • அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது

    தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் ஷங்கர் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

    ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க இருக்கிறார். அண்மையில் கோலாகலமாக நடந்த இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

    விரைவில் இவர்களது திருமணத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக 2022-ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
    • பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    கோவை:

    கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.

    கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

    • அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.
    • போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது.

    கோவை:

    கோவையில் மும்மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போலீஸ் டி.எஸ்.பி. வீட்டு திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    அப்போது அவர் மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டு சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும், கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக அவர் ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதையும் பெற்றுள்ளார்.

    இவருக்கு நிஷாந்தினி என்ற மகள் உள்ளார். இவர் பி.எச்.டி படித்து வருகிறார். இந்நிலையில் வெற்றி செல்வன், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார்.

    அதன்படி நெல்லையை சேர்ந்த சுதர்சன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடித்தார். எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் இருக்கும் வெற்றி செல்வன் தனது மகளின் திருமணத்தையும் மதத்தை கடந்து இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார்.

    அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மவுளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு தனது மகள் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பாக அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் திருமண பத்திரிக்கையில்,

    "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

    மடந்தையொடு எம்மிடை நட்பு."

    என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது.

    தற்போது இந்த திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது. இந்நிலையில் இவரின் மத நல்லினக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

    இந்த திருமண நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) மற்றும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் டி.ஜி.பி அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது.

    அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது. அந்த பத்திரிகை முழுக்க, முழுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் உள்ளது.

    ரூபாய் நோட்டில் அதன் முகமதிப்பு அச்சிடப்பட்டு இருப்பது போலவே திருமணம் நடைபெற்ற ஆண்டு, ரூபாய் நோட்டுக்கான எண் வடிவில் திருமண தேதி, ரிசர்வ் வங்கியின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும் இடத்தில் 'லவ் பேங் ஆப் லைப்' என்றும், ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கும் பிற அம்சங்களைப் போல் திருமண தகவல்களை அச்சிட்டு இருந்தனர்.

    மேலும் காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன. மேலும் அதில் ஒரு கியூ-ஆர் கோடையும் அச்சிட்டு இருந்தனர். அதை ஸ்கேன் செய்தால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.

    தேஜு இந்த அழைப்பிதழை உடுப்பியில் உள்ள தனது நண்பர் மூலமாக டிசைன் செய்து அச்சிட்டு இருக்கிறார். தற்போது அதை பலரும் பார்த்து ரசிப்பது டிரண்ட் ஆகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி.
    • தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி. இவரது இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார். அதன்படி 2000 ரூபாய் நோட்டை போன்று அதே அளவில் மணமகள்- மணமகன் ஆகியோர் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்தார். பின்புறத்தில் திருமண விவரங்கள் இருந்தன.

    திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது 2000 ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வெங்கடேஷ் ஏற்கனவே தனது மூத்த மகள் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண அழைப்பிதழை வித்தியாசமாக வழங்கிய வெங்கடேஷை பலரும் பாராட்டினர்.

    பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்காக பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #AkashAmbani #ShlokaMehta #InvitationCard
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி.


    முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர். ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா - மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்கள் மிகப்பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டுள்ளன. வருகின்ற 30-ம் தேதி நிச்சயர்தார்த்தம் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஒரு அழைப்பிதழ் அச்சிட 1 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்டி வடிவில் உள்ள இந்த அழைப்பிதழில் விநாயகர் சிலை உள்ளது. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ் பார்ப்போரை கவர்ந்து இழுக்கின்றன. #AkashAmbani #ShlokaMehta #InvitationCard

    ×