முதல்வரை சந்தித்த இயக்குனர் ஷங்கர் தனது மகளின் திருமண அழைப்பிதழை தந்தார்

இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர்அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது
முதல்வரை சந்தித்த இயக்குனர் ஷங்கர் தனது மகளின் திருமண அழைப்பிதழை தந்தார்
Published on

தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் ஷங்கர் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க இருக்கிறார். அண்மையில் கோலாகலமாக நடந்த இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

விரைவில் இவர்களது திருமணத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2022-ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com