search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் புல்லிபாய்காளை"

    • கொழுக்கட்டை புல் குறித்தும்,அதன் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
    • காங்கேயம் இன கால்நடைகள் குறித்த புகைப்பட அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

    காங்கயம்:

    காங்கேயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் திருப்பூர் ஈரோடு மாவட்ட தனியார் அரிசி ஆலை அரவை உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு, காங்கேயம் வட்டம் குட்டப்பாளையத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியால் நிர்வகிக்கப்பட்டு வரும், சேனாபதி காளைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வருகை புரிந்தார்.

    கால்நடை மருத்துவம் படித்துள்ள ராதாகிருஷ்ணன், காங்கேயம் இன கால்நடை வளர்ப்பு முறை, அதன் சிறப்புகள் குறித்தும், கொரங்காடுகள், இயற்கை விவசாயம் மற்றும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்த ஜூனியர் புல்லிபாய் எனும் இன விருத்தி காளையை ஆர்வத்துடன் பார்வையிட்டு அதனருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    தொடர்ந்து அவர் அங்குள்ள நிர்வாகிகளிடம் காங்கேயம் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் கொரங்காடுகளில் வளரும் கொழுக்கட்டை புல் குறித்தும்,அதன் பயன்கள் குறித்தும், நாட்டு மாடுகள் வளர்ப்பு அதையொட்டிய வேளாண்மை பற்றி கேட்டறிந்தார். மேலும் கொரங்காட்டில் மேய்ச்சலில் இருந்த காங்கயம் மாடுகள், காளையுடன் படம் எடுத்துக்கொண்டு, மையத்தில் அமைந்துள்ள காங்கேயம் இன கால்நடைகள் குறித்த புகைப்பட அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

    ×