search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் விலை"

    • சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
    • வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று ரூ.50 அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை 1118.50 ரூபாயாக உள்ளது.

    சில மாதமாக உயர்த்தப்படாத சிலிண்டர் விலை இன்று உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை இருப்பு வைத்து இருப்பார்கள்.
    • தற்போது சிலிண்டர் விலை ரூ.96 குறைக்கப்பட்டதால் வினியோகஸ்தர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி பொதுவாக எண்ணெய் நிறுவனங்களால் சமையல் கியாஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்காக கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.96 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,141-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2045 ஆக குறைந்துள்ளது.

    ஆகஸ்ட் மாதம் மிக குறைந்த அளவில் சிலிண்டர் விலை குறைந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் ரூ.96 குறைந்து இருப்பதால் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வர்த்தக பிரமுகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த மாதங்களைவிட இந்த மாதம்தான் விலை குறைக்கப்பட்ட விகிதம் அதிகமாகும். சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வர்த்தக பயன்பாட்டுக்கு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதன் விலை குறைக்கப்பட்டதை வரவேற்றுள்ளனர்.

    அதே நேரத்தில் 2, 3 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொண்டதன் மூலம் பலருக்கு நஷ்டமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை இருப்பு வைத்து இருப்பார்கள். தற்போது சிலிண்டர் விலை ரூ.96 குறைக்கப்பட்டதால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

    வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட போதிலும் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. 14 கிலோ எடையுள்ள அந்த சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1068.50-க்கு விற்கப்படுகிறது.

    • சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
    • வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று ரூ.50 அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது.

    இதன்மூலம் சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை 1068.50 ரூபாயாக உள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 266 அதிகரித்துள்ளது.
    பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. 

    இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 266 ரூபாய் அதிகரித்துள்ளது.

    19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இதற்கு முன்னதாக 1,734  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 266 அதிகரித்து 2000.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ×