search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று"

    • நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர்.
    • விசைபடகு பழுதடைந்து காற்றின் வேகத்தால் திசை மாறி கடல் எல்லைக்கு சென்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் (25), அஞ்சப்பன். (45), தமிழ்ச்செல்வன். (45), நிலவரசன். (25), கண்ணன். (40), மாசிலாமணி. (65), பிரகாஷ், மற்றும் மடத்து குப்பம், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் என 16 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    நேற்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது.

    இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை தேடினர்.

    குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லை.

    விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்துஇந்திய கடல் படை உதவியுடன் சர்வதேச எல்லையில் இலங்கை அருகே படகு இருப்பதை உறுதிப்ப டுத்தினர்.

    படகு பழுதாகி எல்லை தாண்டி வந்ததால் மீனவர்களையும் படகையும் மீட்டு செல்ல இலங்கை கடற்படை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தமிழக கடலோர அமலாக்க பிரிவு போலிசாரின் அறிவுறுத்தல் பேரில் பூம்புகார் மீனவர்கள் 8 பேர் விசைப்படகில் சர்வதேச எல்லைக்கு புறப்பட்டனர்.

    அங்கு இந்திய கடற்படை உதவியுடன் பழுதான படகு மற்றும் 12 மீனவர்களையும் இன்று இரவு மீட்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×