search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகன பேரணி"

    • டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்
    • போலீசார் ஒலி பெருக்கி மூலம் போதைக்கு எதிரான கோஷங்களை வலியுறுத்தி பிரசாரம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் உபகோட்டம் சார்பில் போதை இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டத்தை மாற்றுவோம் என்பதை வலியுறுத்தி போதைக்கு எதிராக போலீசாரின் இரு சக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் நடை பெற்றது.

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து போதைக்கு எதிரான இந்த பேரணி புறப்பட்டது.

    இந்த பேரணியை கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அங்குஇருந்து புறப்பட்ட இந்த பேரணி கன்னியா குமரி போலீஸ் நிலைய சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, ரெயில் நிலையம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, சுவாமிநாதபுரம் ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்த லிங்கபுரம்,

    மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பஞ்சலிங்கபுரம், மாதவபுரம் சந்திப்பு, ஒற்றையால்விளை, சின்ன முட்டம், விவேகா னந்தபுரம் வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை சென்று அடைந்தது. இந்த பேரணியில் கன்னியாகுமரி போலீஸ் உப கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தென்தாமரைகுளம், ஈத்தாமொழி, ராஜாக்க மங்கலம் ஆகிய6போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார், கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த பெண் போலீசார் இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.

    இவர்களது இருசக்கர வாகனத்தில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்ட ப்பட்டுஇருந்தன. மேலும் இந்த பேரணிக்கு முன்னால் போலீஸ் வாகனத்தில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் போதைக்கு எதிரான கோஷங்களை வலியுறுத்தி பிரசாரம் செய்தபடி சென்றனர்.

    ×