search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல்மின் நிலையம்"

    • முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • கப்பலில் உள்ள நிலக்கரியை, அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, காலன் குடி யிருப்பு கிராம பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியர் நிலங்கள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    3 கட்டங்களாக அனல்மின்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த இரு கட்டங்களில் 660 மெகா வாட் கொண்ட அனல்மின்நிலையங்கள் அமைக்கபடவுள்ளது. மேலும் அனல்மின்நிலைய வளாகத்தைச் சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பணி யாளர்களுடன் கட்டிடங்கள் கட்டும் பணி இரவு பகலாகநடந்து வருகிறது.

    அருகில் உள்ள தருவை குளத்து தண்ணீர்அனல்மின் நிலையத்தின் உள்ளே வரமுடியாத அளவுக்கு உறுதியான சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குபகுதியையொட்டி கல்லா மொழி கடற்கரை பகுதியிலிருந்து பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் பணியும், சுமார் 1.50கோடிடன் நிலக்கரி கையாளும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கான துறை முகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, கப்பலில் உள்ள நிலக்கரியை, உயர்மட்ட ராட்சச பாலம் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.

    கப்பலில் கொண்டு வரப்படும் நிலக் கரியைராட்சத கன்வெயர் மூலம் கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு நேரடியாககொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தென்மண்ட லத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதியுடன், நவீனமாடலில் கூடுதல் சக்தி கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியில் உருவாக்கப்படுகிறது.

    கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடி கொண்டு வரும் உயர்மட்ட கம்பிபாலம் பணி முடிந்தவுடன் முதலில் முதல் மின் அலகு மின்சாரம் உற்பத்தி தொடங்கும். இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

    ×