search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகவிலைப்படி உயர்வு"

    • வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது.
    • வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியர்க ளின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

    அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது வீட்டு வாடகைப்படியும் அதற்கு ஏற்றார்போல் உயர்த்தப்படும். ஆனால், இதுவரை வீட்டு வாடகைப் படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இது குறித்து ருத்ரா மற்றும் ருத்ரா சட்ட அலுவலக நிறுவனர்களில் ஒருவரான சஞ்சீவ் குமார் கூறுகையில்,

    "வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது. பொதுவாக வீட்டு வாடகைப்படியானது ஊழியர் எந்த வகை நகரத்தில் வசிக்கிறார் என்பதை பொருத்ததே" என்று கூறினார்.

    வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன. இதில் 7-வது சம்பள கமிஷன் அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டிய போது அடிப்படை சம்பளத்தில் X, Y, மற்றும் Z நகரங்களுக்கு முறையே வீட்டு வாடகைப்படியானது 27சதவீதம், 18சதவீதம் மற்றும் 9சதவீதம் என முன்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    பிறகு தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகைப்படி விகிதங்களை முறையே X, Y மற்றும் Z நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் 30சதவீதம், 20சதவீதம் மற்றும் 10 சதவீதம் என திருத்தியுள்ளது.

    ஆகவே ரூ.35 ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறக் கூடிய மத்திய அரசு ஊழியர்கள் இனி, X நகரவாசியாக இருக்கும் பட்சத்தில் வீட்டு வாடகைப்படி ரூ.10 ஆயிரத்து 500 வழங்கப்படும். Y நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். Z நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.3 ஆயிரத்து 500 வழங்கப்படும்.

    • 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    • மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய அரசு மக்களைக் கவரும் வகையில் பல முக்கிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த 4 சதவீத உயர்வு மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு 2024, ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும்.

    மேலும், மத்திய அரசு சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 10.27 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியம் நேரடியாக சென்று சேரும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
    • இதன்மூலம் அரசு ஊழிஉயர்கள், ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில் அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

    முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

    அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு.
    • மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் யன்பெறுவார்கள்.

    மேலும், மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    • அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூபாய் 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000-ஐ ரூ.3,000 ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000-ஐ ரூ.4,000 ஆக உயர்த்தியும் வழங்க ஆணையிடப்பட்டது.

    திருக்கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு இணை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படியை 34 விழுக்காட்டிலிருந்து, 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டொன்றுக்கு ரூபாய் 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

    மேலும், அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2,000- ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.3,000- ஆக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், இவ்வாண்டு ரூ.1.5 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

    இந்த அறிவிப்புகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அவர்தம் குடும்பத்தாரோடு உற்சாகமாக கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்களும்,  ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் தமிழக அரசுக்கு 1157 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

    ஓய்வூதியதாரர்களுக்கு 154 முதல் 2250 ரூபாய் வரையும், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரையும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூன் 2018 முதல் ஆகஸ்ட் வரை நிலுவையாகவும், அதன் பிறகு சம்பளத்துடனும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
    ×