search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial crisis"

    • கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது
    • தற்கொலை படை தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்

    அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் வருட தொடக்கத்திலேயே, ஒரு டாலருக்கு பாகிஸ்தானிய ரூபாய் 300 எனும் அளவிற்கு அந்நாட்டு கரன்சி மதிப்பிழந்தது.

    சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்கும் சூழலால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள். பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்தது. நாடு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். நிலைமையை சமாளிக்க அரசு இலவசமாக மாவு வழங்கியது. இதனை பெற ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


    ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து பாகிஸ்தானில் தங்கியிருந்த லட்சக்கணக்கான அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைந்தது.

    ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    மொத்தத்தில், தொடக்கம் முதலே 2023 பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக இல்லை.

    • மத்திய பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மைனஸில் இருக்கிறது. பொருளாதாரத்தில் 164- வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
    • இலங்கையின் பொருளாதார நிலையை நோக்கி இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று வல்லுந‌ர்கள் எச்சரிக்கி றார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மைனஸில் இருக்கிறது. பொருளாதாரத்தில் 164- வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை கண்டு தற்போது ரூ. 80 யை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

    இலங்கையின் பொருளாதார நிலையை நோக்கி இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று வல்லுந‌ர்கள் எச்சரிக்கி றார்கள். வருமானம் தரும் அரசு நிறுவனங்களை மோடி தனது குஜராத் மாநிலத்தின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டார்.

    இதனால் புதிய வரி விதிப்புகள் மற்றும் மேலும் வரிகளை உயர்த்துவது தொடரும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகம் குறைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் நாடு கூட பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு விலையை குறைக்காததால் அனைத்து பொருட்களின் விலை மேலும் மேலும் உயரும்.

    வேலையில்லா தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.இதனால் இலங்கை கண்ட கதியை இந்தியா விரைவில் காணவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.பா.ஜனதா அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உதவி செய்து இந்திய மக்களை ஏமாற்றி நாட்டுக்கு பெரும் கெடுதலை செய்து வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா அரசு மத்திய அரசிடம் நிதி பெற்று புதுவை மாநிலத்தின் பொருளாதார பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பை மத்திய அரசு தொடர்ந்து ஈடு கட்டாவிட்டால் புதுவை மாநிலமும், பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×