search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reliance"

    மும்பையில் நடைபெற்ற வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.42,553 கோடி செலுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். #MukeshAmbani
    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உலகின் 19-வது பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளதாவது :-

    “ஜியோ தொடங்கப்பட்ட 22 மாதங்களில் 21 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இதோடு நிற்காமால் பல்வேறு சலுகைகளை சாமானிய மக்களுக்கு ஜியோ வழங்க உள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரத்து 999 மதிப்புடைய ஜியோ போன் 2 சந்தைப்படுத்தப்படுகிறது.

    ஏற்கெனவே சந்தையில் உள்ள ஜியோ 1 போனில் இல்லாத வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஜியோ போன் 2 இருக்கும். தங்களிடம் உள்ள பழைய போன்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து அதனுடன் 501 செலுத்தி ஜியோ போன் 2-வை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். குறுகிய காலத்தில் 10 கோடி ஜியோ போன் வாடிக்கையாளர்களை ஈர்த்து மேலும் ஒரு சாதனை படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ ஜிகா பைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற  பைபர் கேபிள் இணைப்புடன் கூடிய புதிய ப்ராட்பேண்ட் சேவை ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தைப்படுத்தப்படும். இதன்மூலம் 1100 நகரங்களில் உள்ள வீடுகள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு உயர்தர இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்.

    ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் கிராமங்களை சீர்திருத்தும் முயற்சியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 15 மாநிலங்களில் உள்ள 13 ஆயிரத்து 550 கிராமங்களில் உள்ள சந்தைகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியாக ரூ.42 ஆயிரத்து 553 கோடி செலுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 20.6 சதவிகதம் அதிகரித்து 36 ஆயிரத்து 75 கோடியாக உள்ளது".

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #MukeshAmbani
    ×