search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disconnection of pipe connections"

    • குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அவர்களை நகராட்சிக்கு கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
    • குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்பு தாரர்களின் முகவரிகளை கண்டறிந்து குழாய் இணைப்பை துண்டிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டு பகுதி மக்களுக்கு லோயர் கேம்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கூடலூர் நகராட்சிக்கு கடந்த 3 வருடங்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அவர்களை நகராட்சிக்கு கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சிலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை.

    நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கன்னி காளிபுரம், ஏ.எம் சர்ச் தெரு, அருந்ததியர் ஓடைதெரு, கண்ணகிநகர் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாத குழாய் இணைப்புகளை துண்டித்தனர். அப்போது தொழில்நுட்ப உதவியாளர் முத்துவேல், வருவாய் அலுவலர் அய்யப்பன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்பு தாரர்களின் முகவரிகளை கண்டறிந்து குழாய் இணைப்பை துண்டிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×