search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness programme"

    • சர்வதேச பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு, பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

    திருப்பூர் :

    சர்வதேச பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் வளம் பாலம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் கியாஸ் சிலிண்டரில் தீ பிடித்தால் எப்படி அணைப்பது, மழை வெள்ளம் சூழ்ந்தால் அதில் இருந்து தப்பிப்பது, அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

    இதில் திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன், வருவாய் ஆய்வாளர் கலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளயில் சைல்டு லைன் செயல்பாடும், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் 1098 சார்பில் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் பில்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளயில் சைல்டு லைன் செயல்பாடும், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கவுதமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சரஸ்வதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சைல்டு லைன் அணி உறுப்பினர் சுப்ரமணியன் கலந்துகொண்டு சைல்டு லைன் 1098 செயல்பாடு குறித்து விளக்கிப் பேசினார்.

    அப்போது உடல் ரீதியாக, மனரீதியாக, பாலியல் ரீதியாக குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தலை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்துதல். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, குழந்தை திருமணம், போன்ற பிரச்சனைகளை எப்படி தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பள்ளி குழந்தைகளுக்கு விளக்கமாக கூறி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை மோக னாம்பாள், ஆசிரி யைகள் பாக்கியலட்சுமி, கவிதா, கலைச்செல்வி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நடவடிக்கை எடுப்பதுடன் மறுவாழ்வுக்கு தொழில்தொடங்க உதவிகள் செய்து தரப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை நீதிபதி லதா தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    குழந்தைகள் கடத்தலை உறுதி செய்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதுதான் உரிய இழப்பீடு கிடைப்பதுடன் கடத்தப்பட்டவர்களையும் மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்குவார்கள்.

    கவர்ச்சிகரமான பேச்சுகளை நம்பி அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும்போது கடத்தல் சம்பவங்கள் நேர்ந்துவிடுகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்கு உணர்ந்து செயல்படவேண்டும். கொத்தடிமைகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விற்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தெரியவந்தால் உடனடியாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் மறுவாழ்வுக்கு தொழில்தொடங்க உதவிகள் செய்து தரப்படும். இதுகுறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பாரதிராஜா, தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×