search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicles met accidents"

    • கொடைக்கானல் ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சாலை ஓரங்களில் இரு புறங்க ளிலும் காய்கறி கடைகளை அமைத்து விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
    • அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பதற்கு மூஞ்சிக்கல் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரை ஒட்டிய வத்தலகுண்டு பிரதான சாலைகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாத நாட்களி லும் கடும் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

    கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தர விட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கு ம்வகையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானல் ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சாலை ஓரங்களில் இரு புறங்க ளிலும் காய்கறி கடைகளை அமைத்து விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

    நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்படும் காய்கறி கடைகளில் காய்கறி வாங்க வரும் மக்கள் தங்கள் வாகனங்களை அப்படியே பிரதான சாலைகளில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுகிறது.இதனால் போக்குவரத்து நெரிசலும் சாலையை கடக்க பிரதான சாலையில் இருக்கும் வாகனத்தை முந்தும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி யுள்ளது.

    இதை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகின்றனர்.மேலும் முக்கிய சந்திப்பான மூஞ்சி க்கல் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து மணல், ஜல்லி, செங்கல், எம் சாண்ட் கொட்டி அவர்களின் சொந்த இடம் போல் பாவித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இப்பகுதியில் தான் நெடு ஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது.நெடுஞ்சாலை த்துறை அலுவலகம் எதிரே இவ்வாறு வியாபாரம் செய்து வருபவர்களை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்வதில்லை.காவல்துறையினரும் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்ப தில்லை.

    கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பதற்கு மூஞ்சிக்கல் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளது. ஏரி சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை நெடு ஞ்சாலை துறையினரால் சாலையை விரிவாக்கம் செய்யப்பட்டது சாலை ஆக்கிரமிப்பாளர்களு க்காகவா என்பதே பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கேள்வியாக உள்ளது.

    பிரதான சாலை சந்திப்பான மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உணவக ங்களில் உணவருந்த வரு வோர் அப்படியே வாகன ங்களை நிறுத்தி செல்வது மேலும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி வருகிறது.

    மூஞ்சிக்கல் பகுதி பிரதான வளைவு சாலை யில் பல மாத ங்களாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கனரக வாக னம் நிற்கிறது. இதை அகற்ற வும் காவ ல்துறை நட வடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ள பிரதான மூஞ்சிக்கல் சாலையில் கனரக வாகனங்கள் இருபுறமும் நிற்பது எதிரே வரும் வாகனங்களை மறைப்பதாக உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்வோர் எதிரே வரும் வாகனம் பார்வைக்குத் தெரியாமல் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றும் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுகள் துறை சார்ந்தவர்களால் தொடர்ந்து காற்றில் பறக்கவிடப்பட்டு அவமதிக்கும் நிலை உள்ளது. எனவே இனி வரும் காலங்க ளிலாவது அதிகாரிகள் புதிய முறையில் செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×