search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various departmental welfare assistance"

    • விரிவாக்க பணி நடைபெறுகிறது
    • சாலையோரங்களில் உள்ள மரங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த 2020 இல் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் வாணியம்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் வரை 90 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது.

    மேலும் ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியிலிருந்து திருப்பத்தூர் வரை 80 சதவீதம் பணி நடைபெற்று வருகிறது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க வரும் 30-ஆம் தேதி தமிழக முதல்-அைமச்சர் மு க ஸ்டாலின் வருகை தந்து திறந்து வைத்து ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதல்-அைமச்சர் வருகையையொட்டி தேசிய நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள சந்தைக்கோடியூர் பகுதியிலிருந்து பக்கிரிதக்கா வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்கு சாலையோரம் இருந்த புளிய மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியமரத்தை வெட்டி சாய்க்கும் போது சாலையோரம் இருந்த மின் கம்பி மீது மரம் சாய்ந்து விழுந்ததால் அருகிலிருந்த மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதற்கு முன்னதாக மின்வாரியத் துறை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பின்னர் சாலையில் விழுந்த மரங்களை பொக்லை ன் மூலம் முழுவதுமாக அகற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் முறிந்து விழுந்த கம்பத்தையும் அறுந்த மின்கம்பிகளை மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின் கம்பம் அமைத்து மின் இணைப்பு வழங்கினர். மேலும் சாலையோரங்களில் உள்ள மரங்களையும், ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவற்றை துறை அதிகாரிகள் மூலம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் வழங்கி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு இடங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி, சாலை விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    ×