search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UPTET"

    உத்தர பிரதேசத்தில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் லக்னோ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 23 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்படிருந்தது. இந்த தேர்வை சுமார் 19.99 லட்சம் பேர் எழுத இருந்தனர்.

    இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 1,754 மையங்களில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் தேர்வு நடைபெற இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிஅளவில் தேர்வு தொடங்க இருந்த நிலையில் வாட்ஸ் அப்பில் கேள்வி தாள் கசிந்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், கேள்வித்தாள் கசிவு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில், லக்னோ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 23 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்தான நிலையில், மறு தேர்வு அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் நடைபெறும் என சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
    ×