search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvalluvar Award"

    • தேசிய இன விடுதலையும், சிறுபான்மையினா் உரிமையும் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
    • திருக்குறளை மக்கள் சிந்தனைக்கு எடுத்துச் செல்லும் பணிகளை செய்து வருகிறாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரைச் சோ்ந்த இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருதினை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

    மூலனூா் நாரணாவலசு குக்கிராமத்தைச் சோ்ந்தவா் இரணியன் நா.கு.பொன்னுசாமி (வயது 72). இவா் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுகலை படித்து, கோவை சே.ப. நரசிம்மலு நாயுடு நினைவு உயா்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினாா். தந்தை பெரியாரின் தமிழ் தேசியம், சங்க இலக்கியத்தில் சமூக அறம், காற்றும் துடுப்பும் (கவிதை), தேசிய இன விடுதலையும், சிறுபான்மையினா் உரிமையும் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

    கோவை சிங்காநல்லூரில் 1995ஆம் ஆண்டில் திருவள்ளுவா் பேரவை தொடங்கி திருக்குறள் கற்பித்தல், தொடா் சொற்பொழிவு, மாநாடுகள், மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள் போன்றவற்றை மேற்கொண்டு திருக்குறளை மக்கள் சிந்தனைக்கு எடுத்துச் செல்லும் பணிகளை செய்து வருகிறாா்.

    இவரது சேவைகளைப் பாராட்டும் வகையில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவா் விருதினை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தனது இறுதி மூச்சு உள்ளவரை திருக்குறள் சேவை தொடருமென இரணியன் நா.கு.பொன்னுசாமி தெரிவித்துள்ளாா். 

    ×