search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipusa Pal Kavadi Festival"

    • மாலை 6 மணிக்கு கோவில் பஜனை குழுவினரின் திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது.
    • லை 7 மணிக்கு மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் துவங்குகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச பால் காவடி திருவிழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

    முருகன் கோவில்களில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடுமலை பகுதியிலுள்ள முருகன் கோவில்களில் இவ்விழா நடைபெறுகிறது.இந்நிலையில் மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தில் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் தைப்பூச பால் காவடி திருவிழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

    அன்று, காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்ச கவ்ய பூஜை, திரவிய சம்ஹாரம் வழிபாடு, துர்கா லட்சுமி  ஹோமம், கோ பூஜை, இடும்பன்-கடம்பன் பூஜை, காவடி பூஜை, பால்குடங்கள் பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு பால் காவடி புறப்பாடு, வீதி வலம் வருதல், காலை 10:45 மணிக்கு ஞான விநாயகர், ஞான தண்டாயுதபாணி சுவாமி பால் அபிேஷகம், வெள்ளிக்கவச அலங்கார பூஜை நடக்கிறது. பகல் 12:30 மணிக்கு, தூப தீப நைவேத்யம், மகா தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு கோவில் பஜனை குழுவினரின் திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    ×