search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temporary license"

    • பட்டாசு சில்லரை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் இணைய வழி மூலமாக விண்ணப்பம் செய்து பெற இணையவழி தகவு உருவாக்கப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களுடன் 30-ந்தேதிக்குள் இணைய வழியில் இ-சேவை மையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு சில்லரை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் இணைய வழி மூலமாக விண்ணப்பம் செய்து பெற இணையவழி தகவு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வணிகர்கள் 2022 தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக, பட்டாசு சில்லரை விற்பனைக்கான தற்காலிக உரிமங்கள் உரிய அலுவலர்களால் கள ஆய்வு செய்து, இவ்வுரிமங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும் என்பதாலும், கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரைப்படியும்,

    திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு சில்லரை விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் வெடிபொருள் சட்ட விதிகள் 2008ல் சொல்லப்பட்டுள்ள விதிகளின்படி தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 30-ந்தேதிக்குள் இணைய வழியில் இ-சேவை மையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தகுதியுள்ள வணிகர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, உரிமம் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

    ×