search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sheep death"

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் கடுமையான பீதி அடைந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நைனார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் சுமார் 15 கால்நடைகளை பட்டியில் வழக்கம்போல் அடைத்துள்ளார். இதனை அடுத்து நள்ளிரவில் பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் கடித்து கொடூரமாக கடித்ததில் 13 ஆடுகள் ரத்த காயத்துடன் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தன.

    இன்று காலையில் இதனைக் கண்ட ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை வனவர் சத்தியாபிரியா, வனகாப்பளர் வேல்முருகன், பாபு, அனுமனந்தல் கால்நடை மருத்துவர் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடுகளை கடித்த வனவிலங்கு எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன. சிறுத்தைப்புலி நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முச்சானிமேடு அருகில் உள்ள நல்லப்ப நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவர் சென்னையன் (வயது 67). இவர் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சென்று பார்த்த போது பட்டியில் இருந்த தடுப்பு வேலிகள் உடைக்கப்பட்டு 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் ஒரு ஆட்டை காணவில்லை. இறந்த ஆட்டின் வயிறு, நெஞ்சுப்பகுதி ஆகியவற்றில் மர்ம விலங்குகள் கடித்து கொன்றிருப்பது தெரிய வந்தது.

    இதே போல் சென்ற மாதம் வளையல்காரன்கொட்டாயில் நவநீதா என்பவரின் 4 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மர்ம விலங்கின் கால்தடங்களை வைத்து இவை சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்று வருவதால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
    ×