search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of alcohol and meat"

    • காந்திஜெயந்தியன்று இறைச்சி கடைகள் மற்றும் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் அய்யலூர், வடமதுரை, குள்ளனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மது மற்றும் இறைச்சி விற்பனை நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    மகாத்மா காந்தி மது, புலால் உண்பதை தவிர்த்து வந்தார். மேலும் ஆரோக்கியமான வாழ்விற்கு இவற்றை தவிர்ப்பதே நல்லது என அறிவுறுத்தினார். இதனால் காந்திஜெயந்தியன்று இறைச்சி கடைகள் மற்றும் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் மது மற்றும் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதிலும் தடுக்க முடியவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் பெரும்பாலும் திறந்து விற்பனை நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுைற என்பதால் அசைவ உணவு சாப்பிட அனைத்து தரப்பினரும் விரும்பினர். இதனால் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்தனர்.

    இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட போதிலும் திண்டுக்கல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இறைச்சி விற்கப்பட்டது. மேலும் மீன்கடைகளும் திறந்திருந்தன.

    இதேபோல் நகர்பகுதியில் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுகூடங்கள் அடைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆட்கள் மதுவிற்பனையில் ஈடுபட்டனர். நேற்றே அதிகளவில் மது மொத்தமாக வாங்கி வைத்து இன்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக காலை முதலே குடிமகன்கள் மதுவாங்கி சென்றனர்.

    மேலும் மாவட்டத்தில் அய்யலூர், வடமதுரை, குள்ளனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மது மற்றும் இறைச்சி விற்பனை நடைபெற்றது.எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×