search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sai.J.Saravanankumar"

    • புதுவை அரசின் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு சேவை வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
    • தீயணைப்பு வீரர்களோடு, தன்னார்வலர்களான ஆத்ம மித்ரா, சிவில் டிபன்ஸ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு சேவை வாரம் கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி 20-ந் தேதி வரை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தீ விபத்திலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது? என செயல்முறை விளக்கமும் அளித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரை சாலையில் தீ விபத்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தீயணைப்பு வீரர்களின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, நிலைய அதிகாரிகள் முகுந்தன், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், மனோகர்,பக்கிரி, கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்பு ஊழியர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    தீயணைப்பு வீரர்களோடு, தன்னார்வலர்களான ஆத்ம மித்ரா, சிவில் டிபன்ஸ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர். துணை தாசில்தார்கள் விபீஷணன், ராஜலட்சுமி ஆகியோர் தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பேரணியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    • பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலை குழுவினர் மூலம் தொடர்ந்து பறையிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார்.
    • புதுவை காந்தி திடலில் 10 நாட்கள் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதலபிரதான். பறை இசை கலைஞர். இவர் தொகுதி மற்றும் பிற பகுதிகளில் நடக்கும் பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலை குழுவினர் மூலம் தொடர்ந்து பறையிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார்.

    புதுவை காந்தி திடலில் 10 நாட்கள் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சி நிகழ்ச்சியில் ஜெகதலபிரதாபன் தலைமையில் பறை இசை கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி பாராட்டைப் பெற்றனர்.

    இதையடுத்து பறை இசை கலைஞர் ஜெகதலபிரதாபனுக்கு பாராட்டு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு ஜெகதலபிரதாபனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் ஊசிடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன் மற்றும் கூடப்பாக்கம் பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், கரசூர்,தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பா.ஜனதா நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பறை இசைக் கலைஞர் ஜெகதலபிரதாபன் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஊசுடு தொகுதி பா.ஜனதா மக்கள் நலன் தொடர்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நல சங்கம் இணைந்து நடத்தியது.
    • சிறந்த சுய உதவி குழு பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப துணிப்பையினை வழங்கினார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உலக நுகர்வோர் தினத்தையொட்டி வாகன பிரச்சாரம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நல சங்கம் இணைந்து நடத்தியது.

    நிகழ்ச்சியை ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் புதுவை அரசு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நுகர்வோர் கையேடு, சிறந்த சுய உதவி குழு பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப துணிப்பையினை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சங்கத் தலைவர் நாராயணன் , சங்கத் துணைத் தலைவர் பாரதி ஆகியோர் செய்திருந்தார்.

    இதில் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நலசங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
    • விழிப்புணர்வு இதுபோன்ற விழா வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் வரவேற்று பேசினார். மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் பொங்கியப்பன், அரசு செயலாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    விழாவில் அமைச்சர் சாய்.ெஜ.சரவணன்குமார் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட தன்னார்வல அமைப் புகளை சேர்ந்தவர்களை கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    விழிப்புணர்வு இதுபோன்ற விழா வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாம் வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். தரமற்றதாக இருந்தால் அதற்கு தண்டனை வழங்க நுகர்வோர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை 90 நாட்களுக்குள் முடிக்கவேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பேசினார்.

    விழாவில் மாநில நுகர்வோர் ஆணைய உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுந்தரவடிவேலு, குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள், தன்னார்வல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண் டனர். முடிவில் துணை இயக்குனர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    ×