search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.5 Lakhs"

    • அவனியாபுரத்தில் ரூ.5 லட்சத்தில் குடிநீர் தொட்டியை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.
    • நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    அவனியாபுரம்

    மதுரை மாநகராட்சி 92-வது வார்டு அவனியாபுரம் பெரியசாமி நகர் சக்தீஸ்வரி 2-வது தெருவில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கபட்டுள்ள குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.

    இதை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி 92-வது வார்டு காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ கஜேந்திரன் ஏற்பாட்டில் நடந்தது. அப்ேபாது நலத்திட்ட உதவிகளையும் எம்.பி. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இதுபோன்ற திட்டங்களை பாராளுமன்றத்தில் மதுரை மாநகராட்சிக்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அதனை இந்த வார்டு கவுன்சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்.

    இதுபோல் மக்கள் பிரச்சினைகளை கஜேந்திரன் போன்ற தொண்டர்கள் தான் எங்களது கவனத்திற்கு எடுத்து வருகிறார்கள். மக்கள் இவர்களை போல் உள்ள நிர்வாகிகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க. தன்னுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை பிளவுபடுத்துவதே அந்த கட்சிக்கு வாடிக்கை ஆகும். எனவேதான் அ.தி.மு.க. தற்போது பிளவு பட்டு இருக்கிறது என்றார்.

    மண்டலத் தலைவர் சுவிதா விமல், பி.ஜே. காமராஜ், கவுன்சிலர்கள் கருப்புசாமி, ஜெய்ஹிந்த் புரம் முருகன், முத்துலட்சுமி அய்யனார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியன், பழனி குமார், நாஞ்சில் பால் ஜோசப், பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×