search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Piaggio Vespa 150 ABS"

    இந்தியாவில் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஏ.பி.எஸ், எஸ்.ஆர். 125 சி.பி.எஸ்., பியாஜியோ வெஸ்பா 150 ஏ.பி.எஸ்., 125 சி.பி.எஸ். ஸ்கூட்டர்கள் வெளியானது. #aprilia



    இந்தியாவில் ஏப்ரல் 1, 2019 முதல் இருசக்கர வாகனங்களில் புதிய பாதுகாப்பு வழிமுறைகள் அமலாக இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் ஏ.பி.எஸ். வசதியை சேர்ப்பதில் மும்முரமாக இயங்கி வருகின்றன.

    அந்த வரிசையில் அப்ரிலியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட எஸ்.ஆர். 150 மற்றும் பியாஜியோ தனது வெஸ்பா 150 ஏ.பி.எஸ். ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் பியாஜியோ நிறுவனம் வெஸ்பா 125 மாடலில் காம்பி பிரேக் சிஸ்டம் எனப்படும் சி.பி.எஸ். வசதியை வழங்கி இருக்கிறது.

    எஸ்.ஆர். 150 விலை ரூ.80,850, கார்பன் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.82,550 என்றும் எஸ்.ஆர்.150 ரேஸ் வேரியன்ட் விலை ரூ.89,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பியாஜியோ வெஸ்பா வி.எக்ஸ்.எல். விலை ரூ.98,310, எஸ்.எக்ஸ்.எல். விலை ரூ.1.02 லட்சம், எஸ்.எக்ஸ்.எல். 150 ரெட் எடிஷன் விலை ரூ.1.03 லட்சம், எலிகன்ட் ஏ.பி.எஸ். விலை ரூ.1.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    அப்ரிலியா மற்றும் பியாஜியோ சி.பி.எஸ். வசதி கொண்ட ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் வெளியிட்டுள்ளன. அதன்படி அப்ரிலியா 125 சி.பி.எஸ். விலை ரூ.69,250, வெஸ்பா வி.எக்ஸ்.எல்.125 சி.பி.எஸ். விலை ரூ.88,250, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 சி.பி.எஸ். விலை ரூ.91,450, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 ரெட் எடிஷன் விலை ரூ.92,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். அம்சங்கள் தவிர புதிய ஸ்கூட்டர்களில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை. எனினும் புதிய ஸ்கூட்டர்களில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதி புதிய ஸ்டிக்கர்களின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
    ×