என் மலர்

  நீங்கள் தேடியது "Organization of storage warehouses"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 31 ஆயிரம் டன் விளை பொருட்களை இருப்பு வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
  • அதிகாரி தகவல்

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 31 ஆயிரம் டன் விளை பொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை விற்பனைக்குழு செயலாளர் மு.வே.சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் 18 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் 2 துணை ஒழுங்குமுறை விற்பனைகூடங்கள் செயல்பட்டு வருகின்றது.

  ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர், வேட்டவலம், வந்தவாசி, போளூர், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தெள்ளாறு, வாணாபுரம், தூசி, மங்களமாமண்டூர், தானிப்பாடி, கண்ணமங்கலம், ஆதமங்கலம்புதூர் மற்றும் நாயுடுமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நெல், மணிலா, எள், உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, தேங்காய், வெல்லம், ராகி, சோளம், மக்காச்சோளம் முதலிய 40 வேளாண் விளை பொருட்கள் தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன. இந்த வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மூலம் போட்டி விலையில் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

  உடனடி பணத் தேவைக்காக விவசாயிகளால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்கப்படும் விளை பொருள் மதிப்பிற்கு ஏற்ப ரூ.3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் வழங்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

  தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  மேலும் நல்ல விலை கிடைக்கப் பெறாத விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைப்பதற்கு 31 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

  இந்த கிடங்குகளில் முதல் 15 நாட்களுக்கு இலவசமாகவும், பின்னர் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் 180 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 25 பைசா வாடகைக்கு இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வசதிகள் உள்ளன.

  ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உழவர் நலநிதித் திட்டம், உலர்களம் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு காப்பீடு போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

  விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்கள் பொருட்களை விற்பனை செய்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  ×