search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Order to vacate"

    • இடிந்த விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளது
    • அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 11 ஏக்கரில் கடந்த 1984-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்ட 21 பிளாக்குகளில் 960 வீடுகள் கட்டப்பட்டன.

    இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் பல ஆனதாலும், முறையாக பராமரிப்பு இல்லாததாலும், பழுதடைந்து காணப்படுகின்றன.தற்போது 409 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தருமாறு குடியிருப்புவாசிகள் தமிழக வீட்டுவசதி வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதையடுத்து, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் ஆர்.டி.ஓ. இளங்கோ மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    பழுதடைந்த நிலையில் கட்டிடங்கள் உள்ளதால், குடியிருப்புகளை காலி செய்யுமாறு குடியிருப்புவாசி களிடம் அறிவுறுத்தினர். மேலும், அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    அந்த நோட்டீசில், குடியிருப்புகள் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளது புலத்தணிக் கையில் தெரியவருகிறது. எனவே, குடியிருப்புகளில் வசிப்போர், தாங்களாக முன்வந்து, வருகிற 20-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் குடியிருப்புகளை காலி செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×