search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern state merchants arrived"

    • தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் மாட்டு பொங்கல் நடைபெறும் சமயத்தில் கிராமங்களில் சேவல் கட்டு போட்டி நடைபெறும்.
    • சேவல்களை வாங்குவதற்கு பீகார், சண்டிகார், உத்திரபிரதேசம், சத்தீஷ்கர் ேபான்ற வடமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவு வருகை தந்தனர்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரந்தோறும் 3 நாட்கள் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை மாட்டு சந்தை, செவ்வாய்க்கிழமை சேவல், கோழி சந்தை மற்றும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடத்தப்பட்டு வருகிறது

    இதில் ேகாழி சந்தை நடைபெறும் நாளில் பெரும்பாலும் சேவல்களே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கட்டுச்சேவல்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் மாட்டு பொங்கல் நடைபெறும் சமயத்தில் கிராமங்களில் சேவல் கட்டு போட்டி நடைபெறும். இதற்காக உயர்ரக சேவல் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    இதனை வளர்ப்பதற்கா கவே பல்வேறு கிராமங்களில் கைதேர்ந்த நபர்கள் சேவலை தயார்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சேவல்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இந்த சேவல்களை வாங்குவதற்கு பீகார், சண்டிகார், உத்திரபிரதேசம், சத்தீஷ்கர் ேபான்ற வடமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவு வருகை தந்தனர். வடமாநிலங்களில் சேவல் சண்டை மிகவும் கோலா கலமாக நடத்தப்படும். இதற்காக பந்தயம் வைத்து பணம் வசூல் செய்வதும் நடக்கும்.

    இந்த போட்டிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த கட்டு சேவல்களே பயன்படு த்தப்பட்டு வருகின்றன. இதற்காக சேவல்கள் வாங்க ஏராளமான வடமாநி லத்தவர் வந்திருந்தனர். அவர்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விைல கொடுத்து சேவல்களை வாங்கி சென்றனர்.

    சேவல்களுக்கு உணவு கொடுத்து அதனை களத்தில் நின்று விளையாட வைத்து அதன் உறுதியை அறிந்து விலை கொடுத்தனர்.

    இதற்காக கிராமப்புற ங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கட்டு சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த 2 மா தமாக வடமாநிலங்களிலும் தமிழகத்திலும் தொடர் மழை பெய்ததால் சேவல் சண்டைக்கு வியாபாரிகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

    தற்போது மழை குறைந்துள்ளதால் சேவல் விற்பனையும் அதிகமாக நடைபெற்றது. வருகிற பொங்கல் பண்டிகை வரை கட்டு சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்பதால் இதனை வளர்க்கும் விவசாயிகளும் வாரந்தோறும் சந்தைக்கு விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வருகின்றனர்.

    ×