என் மலர்

  நீங்கள் தேடியது "Nellai Kannan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருதினை பெற்றவர்.
  • எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்டவர் நெல்லை கண்ணன்.

  நெல்லை:

  பிரபல இலக்கிய பேச்சாளரும், தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்டவருமான நெல்லை கண்ணன் (77) நேற்று காலமானார். அவர் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

  அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கலெக்டர் விஷ்ணு மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான தமிழ் பற்றாளர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  இன்று காலையில் இருந்து ஏராளமானோர் நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை நக்கீரன் கோபால் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழக செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

  இறுதி அஞ்சலிக்குப் பிறகு திருநெல்வேலியில் உள்ள கருப்பன்துறை மயானத்தில் நெல்லை கண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மறைந்த நெல்லை கண்ணன் மறைவுக்கு குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் மரு. குருநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • கம்ப ராமாயணம் தொடங்கி எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்டவர் நெல்லை கண்ணன்

  திருச்சி :

  நெல்லை தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. மறைந்த நெல்லை கண்ணன் மறைவுக்கு குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் மரு. குருநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  கவிதை வடிவிலான அவரது இரங்கல் செய்தியில், மிகச் சிறந்த தமிழ் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த அயராது பணியாற்றியவர். தனது பேச்சாற்றலுக்காகவும், தமிழ் மீதான பற்றுக்காகவும் வாழும் நாள்களிலேயே அறிஞர்கள் பலரால் அவர் தமிழ்கடல் என்று போற்றப்பட்டவர்.

  கம்ப ராமாயணம் தொடங்கி எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்ட நெல்லை கண்ணன், அரசில் ரீதியாகவும் கொள்கை துணிவு கொண்ட பேச்சாளராவார். எல்லா இலக்கியங்களையும் நெஞ்சில் எழுதி தனது நா வன்மையால் சமகால சமூகத்துக்கு தமிழ் உணர்வை ஊட்டிக் கொண்டே இருந்தவர்.

  எண்ணிலடங்கா தமிழ் கவிதை, காவியம், அறிவரங்கம், தமிழ்மாக்கடலின் மறைவு அறிவுலகம் ஆற்றாமையால் தவிக்கிறதே. இனி ஒரு கண்ணன் அய்யா எங்கே கிடைப்பார் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருதினை பெற்றவர்
  • நெல்லை கண்ணன் மறைவு தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு பெரிய இழப்பு

  நெல்லை:

  தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் இன்று காலமானார். அன்னாரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

  மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

  பின்னர் அமைச்சர் இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்த உடனே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னாரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் வீட்டிற்கு நேரில் சென்று அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்குமாறு கூறினார்.

  அதனைத் தொடர்ந்து நானும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் இன்று தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளோம்.

  தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தின் நல்ல மேடை பேச்சாளரும், தமிழ் இலக்கியவாதியாகவும், தமிழ் சொற்பொழிவாராகவும் திகழ்ந்தவர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு பெரிய இழப்பு, தமிழ்க்கடல் நெல்லை கண்ணனை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், ஆறுதல் தெரிவித்துள்ளோம். அன்னாரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, திருநெல்வேலி வட்டாட்சியர் செல்லசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • 77 வயது நிரம்பிய நெல்லை கண்ணன் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார்.
  • கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

  நெல்லை:

  நெல்லை டவுனை சேர்ந்தவர். பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன்.

  தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார்.

  காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன்.

  இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார்.

  77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார்.

  கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

  அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  ×