search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanasamy assured"

    • புதுவை பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 45 அடி சாலையிலுள்ள பிரின்ஸ் அரங்கில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
    • கூட்டத்தில் காங்கிரசார் பேசும்போது, புதுவையில் முதன்மையான கட்சி காங்கிரஸ்தான். சமீப காலமாக கூட்டணி க்கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 45 அடி சாலையிலுள்ள பிரின்ஸ் அரங்கில் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீல கங்காதரன், காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செ யலர்கள் சங்கர், கருணாநிதி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் காங்கிரசார் பேசும்போது, புதுவையில் முதன்மையான கட்சி காங்கிரஸ்தான். சமீப காலமாக கூட்டணி க்கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதை ஏற்கக்கூடாது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட வாக்குவங்கி அடிப்படையில் காங்கிரஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இது கூட்டணிக்கட்சியினரை உணர செய்ய வேண்டும்" என்று பேசினர்.

    தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் என்ன நடந்ததோ, அதுதான் ரங்கசாமி ஆட்சியிலும் நடக்கிறது. இதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ரங்கசாமி ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதை மக்களிடம் காங்கிரசார் கொண்டு போய் சேர்க்கவேண்டும். புதுவையில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. சமீப காலமாக மதசார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்களில் தி.மு.க.வினர்தான் தலைமை என்று செய்தி வெளியாகிறது.

    போராட்டத்துக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும்.இல்லாவிட்டால் நாம் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. மாதந்தோறும் புதுவையில் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தவேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்க வேண்டும். கூட்டணிக்கட்சி ஒத்துழைக்காவிட்டால் காங்கிரஸ் சார்பில் தனித்து போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்."

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். 

    ×