search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local bodies representatives conference"

    • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நாமக்கல்லில் நடக்கிறது. பொம்மை குட்டைமேடு பகுதியில் 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில், நகர்ப்புற உள்ளாட்சதித் தேர்தலில் வென்ற திமுக, கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்கின்றனர்.

    மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இதற்காக கடந்த ஒரு வாரமாக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகளும் விழா ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்ட நிலையில், விழா பந்தல், மாநாடு நடக்கும் பகுதி ஆகியவற்றை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி தலைமையிலான நிர்வாகிகள் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். மாநாட்டு பந்தலில் முகப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×