என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Liquor Selling"
- அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆய்வு செய்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அமரன் (வயது 29). ரவி (32), ஆறுமுகம் (42) ஆகியோரை பிடித்தனர். இதில் ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இவர்களிலிருந்து100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நேர ங்களிலும், மதுபானங்கள் அமோகமாக விற்பனை யாகிறது.
- சேல்ஸ்மேன்கள் உதவி இல்லாமல் இதுபோன்ற செல்லிங் நடைபெறாது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கூடலூர்:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு கடை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் நேரங்களில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளியிடங்களில் மதுபான ங்கள் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க ப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நேர ங்களிலும், மதுபானங்கள் அமோகமாக விற்பனை யாகிறது. சேல்ஸ்மேன்கள் உதவியுடன் மதுபான விற்பனையாளர்கள் இதனை கூடுதல் விலை கொடுத்து விற்று வருகின்ற னர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்திராணி என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கை யில், சேல்ஸ்மேன்கள் உதவி இல்லாமல் இதுபோன்ற செல்லிங் நடைபெறாது.
அதிகளவு மதுபாட்டி ல்களை கடையில் மொத்த மாக வாங்கிச்செல்பவர்கள் இதுபோன்ற விற்பனை யில்தான் ஈடுபடுவார்கள் என தெரிந்திருந்தும் அவர்களுக்கு மதுபான ங்களை விற்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்