search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPC 376"

    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஐபிசி 376’ படத்தின் விமர்சனம்.
    நாயகி நந்திதா நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு இரவு நேரத்தில் மர்ம நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வருகிறது. அந்த மர்ம நபர், நந்திதாவிடம் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுக்கிறார். போனில் வரும் குருஞ்செய்தியில் வருவது போல் நிஜத்திலும் நடக்கிறது. இந்த சமயத்தில் ஒரு தொழிலதிபர் குறித்து நந்திதாவிற்கு துப்பு கிடைக்கிறது.

    அவர் கொலை செய்யப்பட உள்ளதாகவும் அந்த மர்ம நபர் நந்திதாவிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை நேரில் சந்தித்து, “உங்களது உயிருக்கு ஆபத்து” இருப்பதாக சொல்கிறார் நந்திதா. அந்த தொழிலதிபரோ, நந்திதாவின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அசால்டாக இருக்கிறார். நந்திதா சொன்னபடி அந்த தொழிலதிபர் கொல்லப்படுகிறார். 

    ஐபிசி 376 விமர்சனம்

    இதையடுத்து மற்றொருவரும் இதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நந்திதா. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. இறுதியில் கொலையின் பின்னணியில் உள்ளவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகி நந்திதா, வழக்கமான கிராமத்து பெண்ணாக படங்களில் காட்சிதந்த இவர், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கச்சிதமான தேர்வு. புதுவிதமான கதாபாத்திரம் என்றாலும் திறம்பட நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்து அசத்தி இருக்கிறார். மதுசூதன் ராவ், மகாநதி சங்கர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஐபிசி 376 விமர்சனம்

    இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன், கதையில் ஹாரர், சேஸிங், ஆக்‌ஷன் என பல்வேறு அம்சங்களுடன் கதையை அமைத்துள்ள அவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதபாத்திரங்கள் தேர்வு கச்சிதம். 

    சூப்பர் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் அருமை. யாதவ் ராமலிங்கத்தின் பின்னணி இசையும், தில்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஐபிசி 376’ வேகமில்லை.
    ×