search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindus maintain majority"

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முஸ்லிம் அல்லாத வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக இந்துக்கள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistanelections
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஜூலை மாதம் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 100 மில்லியன் வாக்களார்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 59.2 மில்லியன் ஆண் மற்றும் 46.7 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த தேர்தலை விட முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-ம் தேர்தலில் 2.77 மில்லியனாக இருந்த முஸ்லிம் இல்லாதவர்கள் எண்ணிக்கை 3.63 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, மொத்தம் 1.77 மில்லியன் இந்து வாக்காளர்கள் உள்ளனர். 2013-ம் ஆண்டு தேர்தலின் போது 1.40 ஆக இருந்த இந்து வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த தேர்தலில் உயர்ந்துள்ளது.

    இந்து வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் 40 சதவீத இந்து வாக்களர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். #Pakistanelections

    ×