search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Vocational Training Institutes"

    • பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
    • விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டம், திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதில், பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர இணையதளம் மூலம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று உதவி சேவை மையத்தை அணுகலாம்.

    அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். மேலும் குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட், தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். ஆகவே விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஜூன் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55695, 94990-55700, 94990-55689 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

    ×