search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flying road"

    திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து அலிபிரி சோதனை சாவடி வரை பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.430 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. #Tirupati #TirupatiBusStation
    திருமலை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக திருப்பதியில் பறக்கும் சாலை அமைக்க திருப்பதி நகராட்சி முடிவு செய்துள்ளது.

    அதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ள நகராட்சி அதை ஆந்திர முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. திருப்பதியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது தவிர திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இதனால் திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து அலிபிரி சோதனை சாவடி வரை பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.430 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


    திருச்சானூர் புறவழிச்சாலையில் இருந்து திருப்பதி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், கபில தீர்த்தகம் அலிபிரி வரை 6 கி.மீ. தூரத்திற்கு இந்தப் பறக்கும் சாலை அமைய உள்ளது.

    தேவஸ்தானத்தின் உதவியுடன் அமைய உள்ள இச்சாலை திருப்பதியில் கட்டப்பட உள்ள முதல் பறக்கும் சாலை என்ற பெருமையைப் பெற உள்ளது. #Tirupati #TirupatiBusStation
    ×