search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Finance Board grant"

    • சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவர்களும், பொதுமக்களும், கல்லூரி வாகனங்களும் செல்வதற்கு இடையூறாக இருந்தது.
    • யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் நிதியிலிருந்து 15- வது நிதிக்குழு மானியம் மூலம் 16 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் தெருக்களிலும், சாலைகளிலும் சென்றது. இதனால் சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவர்களும், பொதுமக்களும், கல்லூரி வாகனங்களும் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பல வருடங்களாகவே சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தியிடம் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை உடனே நிறைவேற்றும் விதமாக யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் நிதியிலிருந்து 15- வது நிதிக்குழு மானியம் மூலம் 16 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பணி தொடங்கும் பொழுது ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தனவேல், துணைத் தலைவர் தனலட்சுமி, ஒப்பந்தர் செல்வராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் கருப்பையா, கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் இருந்தனர். 

    ×