search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enforcement"

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
    • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.
    • அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோர் கைதாகி ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன் அனுப்பப்பட்டது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3, 19, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. பண மோசடி தொடர்பான விசாரணைக்காக இந்த சம்மனை அனுப்பி இருந்தது. ஆனால் 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.

    இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    • அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
    • பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியதாகும்.

    பா.ஜனதா அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    மாநில அரசின் அனுமதி இன்றி இந்த அமலாக்க துறையை தலைமை செயலகத்துக்குள் ஏவி விட்டு தி.மு.க. அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த பா.ஜனதா அரசு முனைந்தது.

    தற்போது மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நுழைந்து சோதனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

    மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.


    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

    அப்போது ஏலச்சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.

    தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பா.ஜனதா அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது.

    அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

    அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
    • அமலாக்கத்துறையினர் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஆத்மகுரு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மேகபதி விக்ரம் ரெட்டி.

    இவர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் சுங்கவரி வசூலில் ஈடுபட்டார்.

    இந்த பணியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மேகபதி விக்ரம் ரெட்டியின் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

    விக்ரம் ரெட்டி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையஅதிகாரிகள் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த சில என்ஜினியர்களுடன் சேர்ந்து சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.

    தேசிய நெடுஞ்சாலையின் மன்னுட்டி-அங்கமாலி இடையே 544 பணிகள் பாதியில் முடிக்கப்பட்டு, ரூ.102.44 கோடிக்கு சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

    சாலை அமைப்பதற்காக ரூ.721 கோடி செலவழித்துள்ள நிலையில், ஏற்கனவே சுங்கச்சாவடியில் ரூ.1,250 கோடி வசூலிக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    அமலாக்கத்துறையினர், மேகபதி விக்ரம் ரெட்டி எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர். உதவி இயக்குநர் சத்யவீர்சிங் தலைமையிலான 8 அமலாக்க துறை அதிகாரிகள் குழு எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கே.எம்.சி. நிறுவனத்தின் வங்கி இருப்பு ரூ.125.21 கோடியை பறிமுதல் செய்தனர்.

    • மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் மணல் விற்பனை விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டது.

    மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.

    குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு இருந்தனர். போலி பதிவு மூலம் மணல் விற்பனை நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.

    குவாரி மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில ஆவணங்கள் பிணாமி பெயரில் இருப்பதையும் உறுதி செய்தனர்.

    இதையடுத்து மணல் விற்பனை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அமலாக்கத்துறை சார்பில் தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வரும் ஆற்று மணல் விற்பனை மற்றும் மணல் சேமிப்பு ஒப்பந்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையால் மணல் விற்பனை விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    • 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.
    • யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள் வீடுகளும் தப்பவில்லை.

    இந்நிலையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சிக்கி உள்ளனர். இவர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது அங்கிருந்த ஒப்பந்த தாரர்களின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர்.

    தற்போது சோதனைகள் முடிந்தாலும், யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் யார்டுகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது.

    104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.

    ஆன்லைன் முறையில் மக்கள் பணம் செலுத்தினாலும், லாரிகளுக்கு யார்டுகளில் மணல் அள்ளிப் போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

    பணம் செலுத்தியவர்களுக்காக மணல் அள்ளிச் சென்ற லாரிகள் மணலுக்காக காத்திருக்கின்றன. இந்த யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலசங்க தலைவர் ஐ.கே.எஸ்.நாராயணன் கூறுகையில், கடந்த 12-ந்தேதியில் இருந்து மணல், சவுடு குவாரிகள் இயங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட லாரிகள் மணல் அள்ளும் 'ஸ்டாக் பாயிண்டில்' ஒரு வாரமாக நின்று கொண்டிருக்கிறது.

    லாரி டிரைவர்கள் பசி பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். அங்கு நிற்கும் லாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து உள்ளனர்.

    இந்த விசயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக மீண்டும் மணல் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
    • தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

    வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.

    கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.

    இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.

    தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.

    ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கல்லால் குழுமத்தின் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது.
    • ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ..8.5 கோடி பெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    சென்னை:

    சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

    இந்நிலையில் கல்லால் குழுமத்தின் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கல்லால் குழுமம் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அறக்கட்டளையில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ..8.5 கோடி பெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அந்த தொகையை உடனடியாக வங்கி கணக்கில் இருந்து அவர் எடுத்துக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரவீந்திரநாத் எம்.பி.க்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    மேலும் லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், தயாரிப்பாளருமான ஜி.கே.எம்.குமரனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள இல்லத்தையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் ரூ.36 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களும் கிடைத்தன.
    • வழக்கில் இன்று ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.

    அப்போது ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிலத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சமாக நிலத்தை வாங்கி தனது குடும்பத்தினரின் பெயரில் லாலு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதோடு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களும் கிடைத்தன.

    இந்த வழக்கில் இருந்து லாலு, ராப்ரிதேவி டெல்லி கோர்ட்டில் ஆஜராகி சம்மன் பெற்றார். மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.

    பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் இந்த ஊழல் தொடர்பாக கடந்த மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு பிறகே அவர் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இருந்தது.

    இந்நிலையில் ரெயில்வே பணி நியமனத்தில் நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் இன்று ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதைதொடர்ந்து அவர் மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை 10.45 மணிக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தேஜஸ்வி யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×