search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Pledge"

    • போதை பொருள் எதிர்ப்பு குறித்து சைக்கிள் பயணம் செய்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    • பா.ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், போதைப் பழக்கமும், சமுதாய சீர்கேடும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் நிதி ஆயோக்கில் பதிவு பெற்ற தேசிய குடியரசு மக்கள் பேரவை அமைப்பை சேர்ந்த, சென்னை புறநகர் அத்திப்பட்டு, புதுநகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் டாக்டர் மதன், தீபக் , சங்கீத் மற்றும் கோகுல் கண்ணன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் எதிர்ப்பு குறித்து சைக்கிள் பயணம் செய்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக, இந்த சைக்கிள் பயணம் புதுவை தேங்காய் திட்டில் அமைந்துள்ள வித்யாபவன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    தேசிய குடியரசு மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பிரேம் கணேஷ், துணை தலைவர் தியாகராஜன், பொது செயலாளர்கள் ராகவேந்திரன், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், போதைப் பழக்கமும், சமுதாய சீர்கேடும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    இதில் 500-க்கும் மேற்பட்பட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×