search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Domestic Production"

    • நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம்.
    • வளர்ச்சி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் 6.4 சதவீத வளர்ச்சி மற்றும் பொருளாதார ஆய்வின் கணிப்பை விட குறைவாக உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2023-24-ம் நிதியாண்டிற்கான ஆய்வு அறிக்கையை கிரெடிட் ரேட்டிங் இன்பர்மேசன் சர்வீஸ் ஆய்வு மையம் மேற்கொண்டது. அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த அறிக்கையில் 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் 6.4 சதவீத வளர்ச்சி மற்றும் பொருளாதார ஆய்வின் கணிப்பை விட குறைவாக உள்ளது.

    இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறும்போது, 2023-ம் நிதியாண்டில் தேசிய புள்ளியியல் அமைப்பு மதிப்பிட்டுள்ள 7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்தை எட்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளனர்.

    உலக பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். அதோடு கச்சா எண்ணை மற்றும் பொருட்களின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×